Connect with us

கனமழை மற்றும் பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil Nadu

கனமழை மற்றும் பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

d60cccbdbc56c903c701cb596bfabf75

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் நாளையும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 

தமிழகத்தில் இன்றும் நாளையும் தென்மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் எனவே அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top