சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்கனவே சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில மாவட்டங்களில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் என்றும் இந்த நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மக்கள் 2 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கள்ளக்குறிச்சி, மதுரை,சிவகங்கை,விருதுநகர், புதுக்கோட்டை தென்காசி ,தேனி,திண்டுக்கல், கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் ,டெல்டா ,மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment