இன்றும் நாளையும் 22 மாவட்டங்களில் கனமழை: இன்னொரு கேரளாவா?

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 25க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவுக்கு கைகொடுக்க தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி, குமரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment