ரெடியா இருங்க மக்களே! 6 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – வானிலை அப்டேட்!!

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று, நாளை
தமிழகம், புதுவை மற்றும் காரைகால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் சோகம்! மின்சார ரயில் மோதி இளைஞர் பலி.!!

அதே போல் 22-ம் தேதி தமிழக கடலோ மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருகின்ற 23-ம் தேதிகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர்,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.