Connect with us

கனமழை எதிரொலி: அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!

Amaravathi

தமிழகம்

கனமழை எதிரொலி: அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் குட்டைகள், நீர்வீழ்ச்சிகள், அணைகள் போன்றவை நிரம்பி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வரதமாநதி நீர்தேக்க பகுதிகள் நிரம்பிய நிலையில் அணையில் இருந்து 600 கன அடி நீர் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அதே போல் பாலாறு, கொழுந்தல் ஆறு முழு கொள்ளவை நெருங்கும் நிலையில் அங்கிருந்து சண்முக நதி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குதிரை ஆறு நிரம்பியதுடன் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top