
தமிழகம்
2 நாட்களுக்கு கனமழை அலர்ட்!! வானிலை மையம் தகவல்;;
தமிழகத்தில் வரும் 29, 30 தேதிகளில் 11 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்றைய தினத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போல் நாளைய தினத்தில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வருகின்ற 29,30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது.
அதே போல் தேனி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
