கனமழை! இடிந்து தரைமட்டமான 10 வீடுகள்..!!

கடல் சீற்றம் காரணமாக மரக்காணம் அருகே 10 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் அதிகாலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் ஆக்ரோஷமாக காணப்படுகிறது.

நள்ளிரவில் கரையை கடக்கும் புயல்… எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

அதன் ஒருபகுதியாக பிள்ளைச்சாவடி பகுதியில் 10 கைவிடப்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அதோடு 3 படகுகள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டதாக தெரிகிறது.

இந்த பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கான தூண்டில் வலைவு அமைக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

மாண்டஸ் புயல்: சென்னையில் ஏழு விமான சேவை ரத்து..!!

மேலும் கனமழை மற்றும் புயல் காரணமாக இந்த பகுதியில் வீடுகள் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாக இருப்பதாகவும், இதுவரையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.