Connect with us

மீனவர்களே கொஞ்சம் உஷார்? பலத்த சூறாவளி-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மீனவர்

தமிழகம்

மீனவர்களே கொஞ்சம் உஷார்? பலத்த சூறாவளி-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மீனவர்களே கொஞ்சம் உஷார்? பலத்த சூறாவளி-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தற்போது வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதுவும் குறிப்பாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச உள்ள வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்த பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு வங்கக் கடலில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரள கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top