பலத்த சூறாவளி: அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனென்றால் வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீட்டித்துள்ளது.

இந்த நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று வங்க கடலின் தென்பகுதி, தெற்கு அந்தமான், குமரிக் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

நாளைய தினம் வங்கக் கடலின் தென் பகுதி, தெற்கு அந்தமான், மன்னார் வளைகுடா, குமரி கடலில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மார்ச் 3ஆம் தேதி வங்கக் கடலின் தெற்கு, மத்திய மேற்கு பகுதிகள், மன்னார் வளைகுடா குமரி கடலில் பலத்த சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மார்ச் 4 ஆம் தேதி வங்கக் கடலின் தென்மேற்கு, வடமேற்கு, தெற்கு அந்தமான் கடல், மன்னார் வளைகுடாவில் சூறாவளி வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் மார்ச் 4 ஆம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் குமரி கடல் பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மார்ச் 5ஆம் தேதி வங்கக் கடலின் தென்மேற்கு, வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடந்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment