அள்ளி வீசப்பட்ட கடற்கரை மணல்.. சென்னை பட்டினப்பாக்கத்தில் பெரும் சேதம்!

வங்க கடலில் உருவான புயல் நேற்று கரையை கடந்த நிலையில் புயல் கரையை கடக்கும் போது கடற்கரையில் உள்ள மணல் அள்ளி வீச பட்டதாகவும் இதனால் பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடற்கரையிலிருந்த நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் படகுகள் ஆகியவை முழுவதுமாக சேதமாகி இருக்கிறது என்றும் அது மட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த சிறு உணவகங்கள் மற்றும் கடைகள் ஆகியவைகளும் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

storm13மேலும் மீன் பிடிப்பதற்காக வலைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வலைகள் மீது முழுவதுமாக மணல் பரவி இருப்பதாகவும் மீண்டும் அந்த வலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சுமார் எட்டடி உயரத்துக்கு அலைகள் எழுப்பியதாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மீட்பு படையினர் தயாராக இருந்ததால் எந்தவிதமான உயிர் சேதமும் இந்த புயலால் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சேத விவரங்களை மதிப்பெடுத்து தமிழக அரசு விரைவில் அதற்கான நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.