வேலூரில் “அதிமுக-திமுகவினர்” இடையே கடும் வாக்குவாதம்!!

bcf6a61edcaf0933c43f1ad5618f1973

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக காணப்படுகின்றது திமுக. தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக தற்போது உருவாகியுள்ளது அதிமுக. இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன.5f8f7369fe241890f0d6cdd09ec7bad3

இந்த நிலையில் தற்போது திடீரென்று அதிமுக-திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அரங்கேற்றியுள்ளது. அதன்படி வேலூரில் உள்ள காட்பாடி ஒன்றியம் 8வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவரை வாபஸ் பெற வைத்ததாக அதிமுக புகார் அளித்தது. மேலும் மாற்று வேட்பாளரின் மனுவை வாபஸ் பெற்ற போது, அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரிடமும் வாபஸ்  மனுவில் கையொப்பம் பெற்றதாக புகார்.

அதிகாரிகளிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது திமுகவினர் எதிர்வாதத்தில்  ஈடுபட்டனர். இதனால் அதிமுக-திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் நெல்லையிலும் திமுக-அதிமுக இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக தரப்பில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment