தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் திண்டுக்கல், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது .தமிழ்நாட்டில் கோவை ஈரோடு நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஈரோடு மாவட்டம் அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கொடைக்கானலில் பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தவாறு இயற்கை ஏழை ரசித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டி தீர்த்து கனமழையால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது ,இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர் .
இதேபோல காஞ்சிபுரத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெறுதல் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் மழைநீர் உடன் கழிவுநீர் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை எடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்தனர் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் எனவும் குறைந்த கட்டெழுத்து தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டை உலுக்கும் அதிர்ச்சி!! குஜராத், மஹாராஸ்ட்ராவில் 5610 இளம்பெண்கள் மாயம்..!
ஆனால் இந்த புயல் தமிழ்நாட்டை விட்டு விலகிச் செல்லும் என்பதால் வெயில் உச்சம் தொடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.