இந்தூரில் சோகம்! ஜிம்மில் மாரடைப்பு.. ஹோட்டல் உரிமையாளர் மரணம்!

மத்திய பிரதேசத்தில் உடற்பயிற்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளர்ந்து வரும் நவீன காலக்கட்டத்திற்கு மத்தியில் மாரடைப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக அமைந்து விடுகிறது. குறிப்பாக உணவு பழக்கம், மது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களினால் அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்புக்கு முக்கிய காரணிகளாக அமைந்து விடுகிறது.

ஜார்கண்ட் அரசுக்கு எதிர்ப்பு: ஜெயின் சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பிரபல ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தினமும் ஜிம்மிற்கு வந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய தினத்தில் ஜிம்மிற்கு வந்துள்ளார்.

அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு தரையில் சரிந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.

டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க பரிந்துரை: ஐகோர்ட் கிளை உத்தரவு!

இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இளைஞர் மற்றும் முதியவர்கள் ஜிம்மிற்கு செல்வதற்கு முன்பாக கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.