இளம் வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு..! காரணம் என்ன?

வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டே போகிறது. இதன் எதிரொலியாக 30-36 வயதுடைய இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு எனப்படும் கார்டியாக் அரெஸ்ட் அதிகளவில் ஏற்படுகிறது.

இதற்கு உடலுழைப்பு இன்றி பெரும்பாலும் உட்கார்ந்தே இருப்பது தான் முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக தற்போதைய இளைஞர்களுக்கு ஐ.டி போன்ற வேலைகள் சுலபமாக கிடைக்கின்றன.

இதனால் உடலுழைப்பு இன்றி இருப்பதே முக்கிய காரணம் என்று கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மது மற்றும் புகைப்பழக்கம் உடையவர்கள், அதிகமாக பாஸ்ட் புட் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக தாக்குகிறது.

இந்நிலையில் இளைஞர்கள் அதிகமாக சராசரியாக 6 டூ 8 வரையில் தூங்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் நீண்ட நேரம் உடல் உழைப்பில் ஈடுபடுவதால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இதனால்  நீரிழிவு போன்ற நோய்கள் வருவதால் இவர்களுக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இவ்வாறான மாரடைப்பை தடுக்க முதலில் அதிகளவில் நடக்க வேண்டும் என்றும் நம் அன்றாட உணவில் எண்ணெய், சர்க்கரை, அதிக கொழுப்பு நிறைந்த உணவை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews