Connect with us

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடுத்த மனு இன்று விசாரணை!!

admk meeting

தமிழகம்

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடுத்த மனு இன்று விசாரணை!!

ஜூலை 11ம் தேதி அதிமுக கட்சியினரால் மறக்க முடியாத தினமாக மாறி உள்ளது. ஏனென்றால் அன்றைய தினம் கட்சி இரண்டாக பிளந்தது என்று கூறலாம். மேலும் கட்சியின் தொடர்கள் இரு பிரிவினராக பிரிந்து மாறி மாறி கட்சியின் அலுவலகத்திற்கு முன்பு தாக்கி கொண்டனர்.

அன்றைய தினம் தான் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி சென்னை வானரகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இதில் இடைக்கால பொதுச் செயலாளர் அறிவிக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தொடுத்த மனுவினை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் பின்பு உச்ச நீதிமன்றம் இன்னும் இரண்டு வாரங்களில் பொதுக்குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஆணை பிறப்பித்தது.

அதன்படி உயர்நீதிமன்ற தனி நீதிபதி அதிமுக பொது குழு செல்லாது என்று உத்தரவிட்டர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு தொடுத்தது. அந்த மனு என்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top