ஆரோக்கியம் நிறைந்த சோளப் பணியாரம்!!

6ccbb34d7ffddf66aba5747ccbd0b80b-1-2

சோளத்தில் புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்ச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் எனப் பலவும் உள்ளது. இதில் இப்போது இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
சோளம் – 150 கிராம்
உளுந்து – 150 கிராம்
வெந்தயம் – கால் ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
1.    சோளம், உளுந்து, வெந்தயம் என அனைத்தையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து இதனை இட்லி மாவுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து புளிக்க விடவும்.
2.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதனை மாவில் கொட்டிக் கிளறி பணியாரக் கல்லில் ஊற்றி இருபுறமும் போட்டு எடுத்தால் சோளப் பணியாரம் ரெடி.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.