ஆரோக்கியம் நிறைந்த காளான் சூப்

083d1934653833cedadfdd7f8c9bcd22

காளான் இரத்தத்தினை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது, மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் காளானை கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இப்போது நாம் காளானில் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:
காளான்  – கால் கிலோ
பூண்டு – 1
நெய் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி- 1
பட்டை – 1 துண்டு
மிளகுத் தூள் – 1 ஸ்பூன்
சீரகத் தூள்- ½ ஸ்பூன்
கொத்தமல்லி  இலை– தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு, 

செய்முறை :
1. காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.
2. வாணலியில் நெய் விட்டு பட்டை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை, காளான், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.
3. அடுத்து மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் காளான் சூப் ரெடி. 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.