ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ கேக்!!

20e243d63c5166bdfa0d721e48518fdb-2

வாழைப்பழத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
வாழைப்பழம்                 –        4
வால்நட்                     –        5
கோதுமை மாவு              –        1.5 கப்
பேக்கிங் பவுடர்- ½ ஸ்பூன்
சமையல் சோடா               –        1/2 ஸ்பூன்
உப்பு                           –        1 ஸ்பூன்
சர்க்கரை                     –        1/2 கப்
நெய்                   –        150 மில்லி
வெண்ணிலா எசென்ஸ்      –        1 ஸ்பூன்

செய்முறை
1.    வாழைப்பழத்தினை தோல் உரித்து மிக்சியில் போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். அடுத்து சர்க்கரையினை மைய பொடித்துக் கொள்ளவும். வால்நட்டை துருவிக் கொள்ளவும்.
2.    அடுத்து வாழைப்பழம், நெய் மற்றும் வெண்ணிலா எசென்ஸ், கோதுமை மாவு, சர்க்கரை, சமையல் சோடா, பேக்கிங் பவுடர், வால்நட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 
3.    இந்தக் கலவையினை னெய் தடவி கேக் பானில் ஊற்றி 30 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால் வாழைப்பழ கேக் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.