ஓமிக்ரான் பரவல்- சுகாதாரத்துறை செயலாளர் ஆட்சியர்களுக்கு கடிதம்

இரண்டு மாதத்திற்கு முன் ஆப்ரிக்காவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுதான் ஓமிக்ரான் இந்த தொற்று தற்போதைய டெல்டாவில் இருந்து உருமாற்றம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த தொற்றின் வீரியம் இதுவரை சரியாகா தெரியாத நிலையில் இந்த ஓமிக்ரான் தொற்றுதான் கொரோனாவின் மூன்றாம் அலையாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வட மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் எல்லாம் கொரோனா தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது.கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்  விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க தயங்க வேண்டாம் எனவும் அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment