பெற்றோர்களே உஷார்!! வெளிநாட்டு பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

குழந்தைகள் விளையாடக்கூடிய வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

.துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த ஜனவரி 6ஆம் தேதி உயிரிழந்தார், அவருடைய படத்திறப்பு விழா உத்திரமேரூர் அருகே உள்ள களியாமுண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர்,  உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மூலமாக வெளிநாட்டு மற்றும் தரச் சான்று இல்லாத பொம்மைகளின் தரம் கட்டுபாடு குறித்தும் அதில் என்னென்ன ரசாயன பொருட்கள் கலந்துள்ளது, எந்தெந்த நாடுகளில் இருந்து வருகிறது, என்பது உள்ளிட்ட பல்வேறு செய்திகளை ஆராய்ந்து அதற்கேற்ற மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொம்மைகளை கையில் விளையாடுவது, அதில் இருக்கின்ற சாயம்,அதை எடுத்து நாக்கில் வைப்பது என்பது போன்ற விஷயங்கள் இருக்கும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.