“என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க” விழா மேடையில் இருந்து விறுவிறுவென வெளியேறிய அமைச்சர் மா.சு… பதறிய அதிகாரிகள்!

அரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சரியில்லை எனக்கூறி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூரில் பருவ கால காய்ச்சலைக் கட்டுபடுத்துவது தொடர்பான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தின் அராக பங்கேற்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது தொடர்பாகவும், மருத்துவத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் உட்பட சுமார் 1000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். குறிப்பாக மிகக்குறைந்த அளவிலான செவிலியர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இதனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சரியில்லை எனக்கூறிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் நிறைவடையும் வரை காத்திருந்த அமைச்சர், மேடையில் இருந்து விறுவிறுவென வெளியேறியது அங்கிருந்த அதிகாரிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் எடுத்துச் சொல்லியும் அமைச்சர் “என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க” என கேள்வி கேட்டபடியே விழா அரங்கை விட்டு வெளியேறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment