கொரோனா முன்னெச்சரிக்கை: ஆக்சிஜன் இருப்புவைக்க சுகாதாரத்துறை உத்தரவு!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமா ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்பி வைக்க சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளை பொறுத்தவரையில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக சீனா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்த பிஏ.7 வகை கொரோனா மளமளவென வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் ஆக்சிஜன் வசதிகள் வழக்கத்தை விட 80% நிரப்பி வைக்குமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வரையில் அனைத்து மருத்துவ மனைகளில் தினசரி ஆக்சிஜன் தேவை என்பது 60 முதல் 65 மெட்ரிக் டன்வரை இருப்பதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி திறன் 486 மெட்ரிக் டன் வரை செய்துகொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1546 டன் ஆக்சிஜன் சேமிக்கும் வசதி இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் இருப்பு டாங்குகளை 80% நிரப்ப வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.