இளநிலை மாற்றம் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் மருத்துவ சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவமனை நீட் தேர்வு தற்போது நடத்தப்பட்டு அதன் மதிப்பெண்கள் படி நிரப்பப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலை படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசி ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்தி வருகிறது.
ஆனால் மீதமுள்ள இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வை அந்தந்த மாநில அரசு நடத்தி வருகிறது.. இந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இளநிலை மதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 100% இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தலைமை இயக்குனரத்தின் மூலம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நடவடிக்கையின் போது மாநில அரசு சார்பில் ஒரு அதிகாரி நியமிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு மருத்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் வருகின்றன. இது மாநில உரிமையை பறிக்கும் செயல் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.