திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் மெய்யநாதன் சென்னை புறப்பட்டார்..!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர், கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே சமயம் அமைச்சர் வருவதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் சிகிச்சை முடிந்து அமைச்சர் மெய்யநாதன் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.