Connect with us

தலைக்கேறிய பப்ஜி மோகம். குடும்பத்தாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சிறுவன்!

Untitled 130

செய்திகள்

தலைக்கேறிய பப்ஜி மோகம். குடும்பத்தாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சிறுவன்!

தலைக்கேறிய பப்ஜி மோகம். குடும்பத்தாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சிறுவன்!

பப்ஜி விளையாட்டானது இன்றைய பள்ளி மாணவர்களில் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை அனைவரையும் கைக்குள் வைத்திருப்பதாக உள்ளது.

காலையில் துவங்கி மாலை வரை உணவு உண்ணாமல் இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் பப்ஜி கேம் விளையாடுகின்றனர்.

பப்ஜி கேம் குறித்து பெற்றோர்கள் எவ்வளவு கண்டித்தாலும் பிள்ளைகள் புரிந்து கொள்வதாய் இல்லை.

பப்ஜி விளையாடியது குறித்து தட்டிக் கேட்டதால் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தாரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வசிப்பவர்தான் நஹித் முபாரக், இவர் சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றுகிறார்.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே விவாகரத்து நடைபெற்றுவிட்டது. இவருக்கு தைமூர் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

நஹித் முபாரக் குடும்பத்தின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு லைசன்ஸ் வாங்கி துப்பாகி ஒன்றினை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் தைமூர் தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் பப்ஜி விளையாடியதைத் தொடர்ந்து அவரது அம்மா மற்றும் இரண்டு சகோதரிகளும் இதுகுறித்துத் தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனால் கடுப்பான தைமூர் வீட்டில் இருந்த துப்பாக்கியால் இரண்டு சகோதரிகளையும் அதனைத் தொடர்ந்து தாயையும் சுட்டுக் கொன்றுள்ளார்.

அதன்பின்னர் தான் செய்த தவறால் குடும்பத்தை இழந்ததை நினைத்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top