”பல்லை தட்டி கையில கொடுத்திடுவன்” – நிரூப்ப கிழித்தெடுத்த வனிதா..
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மூன்று வாரங்களாக விறுவிறுப்பாக தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியின் விளையாட்டு அல்ல சண்டைகள் என்றே கூறலாம்.
அந்தவகையில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த வாரங்களில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த டபுள் எவிக்ஷன் முறையில் ஷாரிக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்பட்ட நிலையில் விக்ரம் படப்பிடிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாததால் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுக்க ஏஞ்சல்ஸ் vs டெமன்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு சக போட்டியாளர்கள் வாக்குவாதம்தான் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தான் விளையாடாமல் எப்படி விளையாடுவது என்கிற கேமை ஆடிவரும் வனிதா என்றும் நாங்கள் தேவதைகள் இப்படி தான் பன்னுவோம் என
இதனால் கோபம் அடைந்த வத்திகுச்சி வனிதா பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன் என்றும் பல்லை ஒடைச்சிடுவேன் ராஸ்கல் என பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
