அடி தூள்! வசூலில் கல்லாகட்டும் அவதார் 2.. எத்தனை கோடி தெரியுமா?

கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பது அவதார் என்றே கூறலாம். கற்பனை உலகமாக உருவாக்கப்பட்ட இப்படத்தினை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 3 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. இதன் வெற்றியை கொண்டாடும் விதத்தில் விரைவில் அவதார் 2 வரும் என இயக்குநர் அறிவித்திருந்தார்.

avatar

அதன் ஒரு பகுதியாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் இப்படம் மீண்டும் உருவாகி 160 மொழிகளில் அவதார் 2 நேற்றைய தினம் வெளியாகியது.

இதற்கிடையில் அவதார் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, தமிழகத்தை பொறுத்தவரையில் 4.5 முதல் 5 கோடி வரையில் வசூலித்துள்ளாம். அதே போல் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுமார் 10 கோடிக்கு மேல் வசூலாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

avatar 3

இதனையடுத்து உலகம் முழுவதும் 90 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகியதால் வசூல் பாதிக்கப்படும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.