
News
சாப்பிட்ட புரோட்டாவுக்கு காசு கொடுக்காததால் கைது செய்யப்பட்டார் அமமுக நிர்வாகி!!!
சாப்பிட்ட புரோட்டாவுக்கு காசு கொடுக்காததால் கைது செய்யப்பட்டார் அமமுக நிர்வாகி!!!
நம் தமிழகத்தில் சில நாட்களாகவே புரோட்டா பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் சென்னையில் உள்ள ஒரு இளைஞர் புரோட்டா சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி அதிகாலையில் உயிரிழந்தார்.
பல பகுதிகளில் புரோட்டா பற்றிய அச்சம் உருவாகிவிட்டது. இவ்வாறு இருக்கையில் தற்போது புரோட்டா சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காததால் கைது என்ற தகவல் தமிழகம் எங்கும் பரவுகிறது.
அதுவும் அரசியல் கட்சி நிர்வாகி இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் ஒரு புரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு பணம் தரவில்லை. பணம் தராமல் தகராறு செய்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி.
இந்த தகராறு செய்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி சரவணன் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி சரவணனை கைது செய்து கோவை செட்டிபாளையம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புரோட்டா சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட பணத்திற்காக காசு கொடுக்காமல் தகராறு செய்துள்ளது சுற்றி விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.
