Connect with us

நீலகிரியில் “புலி தாக்கியதால் தலையில் படுகாயம்”! கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!!

News

நீலகிரியில் “புலி தாக்கியதால் தலையில் படுகாயம்”! கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!!

64bc3a40b3f89366bd42c82afa5a6947

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப நம் தமிழ்நாட்டில் அதிக அளவு வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் பல பகுதிகள் காடுகளாக காணப்படுகிறது.ஆனால் காலம் செல்லச் செல்ல பல வனப்பகுதிகளில் மக்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் வன விலங்குகள் சரணாலயம் அதிகமாக காணப்படுகிறது.c33c415afee2f338435149ece74d628e

மேலும் தற்போது மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவது அங்கு வாழும் மக்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கூடலூரில் புலி தாக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் என்ற பகுதியில் புலி ஒன்று தாக்கியதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் சந்திரன் தலையில் படுகாயம் அடைந்ததாக  கூறப்படுகிறது. இந்த  நிலையில் தலையில் படுகாயமடைந்த சந்திரன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் T23 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புலி இதுவரை இரண்டு பேரை தாக்கி கொன்று விட்டதாக அங்குள்ள மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக இந்த புலி நடமாட்டம் அதிகமாக காணப்படுவது தெரிய வந்துள்ளது. மேலும் பல மக்கள் இந்த புலிகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top