டெல்லியில் பயங்கரம்! மாடியிலிருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்..!!

டெல்லியில் பள்ளி மாணவியை ஆசிரியர் ஒருவர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகராக கருதப்படும் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இருப்பினும், அவ்வப்போது குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

அந்த வகையில் பிராத்மிக் வித்யாலயா என்ற மாநகராட்சி பள்ளியில் ஆசிரியை கீதா தேஷ்வால் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 5-ம் வகுப்பு மாணவி ஒருவரை கத்தரிக்கோலால் தாக்கி தலைமுடியை வெட்ட முயன்றுள்ளார்.

பின்னர் மாணவியை முதல் மாடியில் இருந்து துாக்கி வீசியுள்ளார். இதில் மாணவி பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மாணவியை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மாணவி நலமுடம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஆசிரியை கீதா தேஷ்வாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களை பெண்சில்கள் மூலம் குத்தியதாகவும், தன்னை கீதா தேஷ்வால் வாழ்க.. என்று அழைக்க சொல்லி கட்டாயப்படுத்தியது அம்பலமானது. மேலும், அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.