கரூரில் பயங்கரம்! கள்ளக்காதலனை பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு..!!

கரூரில் கள்ளக்காதலனை பெண்ணின் உறவினர்கள் அடித்து சாலையில் தரத்தரவென இழுத்து சென்ற சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றதாக தெரிகிறது. இவரது மகள் வடிவு கரசி என்பவருக்கு திருமணமாகி 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

அதிர்ச்சி! கட்டுப்பாட்டை இழந்த கார்… பெண் ஐடி ஊழியர் பலி!!

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் கார் வாங்குவதற்காக குப்புசாமி, வடிவு கரசி ஆகிய இருவரும் கார் ஷோரூமுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது காரில் விலை அதிகமாக இருப்பதால் விலை குறைந்த பிறகு தகவல் கொடுப்பதாக திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து வடிவு கரசி மற்றும் சசி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதையடுத்து நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த சூழலில் வடிவு கரசி தனது குடும்பத்தினரிடம் 30 லட்சம் பணம் பெற்று சசிக்கு கொடுத்தாக கூறப்படுகிறது.

இன்று முதல் 21-ம் தேதி வரை… எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் சசியின் கேட்ட போது தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் சசியை தாக்கியுள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சசியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.