Connect with us

அழகிகள் வர தாமதம்: சினிமா தயாரிப்பாளர் கொலையில் பகீர் பின்னணி?

death 2

தமிழகம்

அழகிகள் வர தாமதம்: சினிமா தயாரிப்பாளர் கொலையில் பகீர் பின்னணி?

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபரும் சினிமா தயாரிப்பாளருமான பாஸ்கர் என்பவர் வீட்டில் இருந்து மாயமான நிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாக பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவரும் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இதனிடையே அவரிடம் விசாரணை நடத்தியதில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் கணேசனிடம் ரெகுலர் கஸ்டமராக பாஸ்கர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துள்ளார். அதே சமயம் அவரிடம் அழகிகளை கேட்டு அடிக்கடி பாஸ்கரன் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் படி, கடந்த வெள்ளிக்கிழமையில் பாலியல் தேவைகளுக்காக குறிப்பிட்ட 2 பெண்களை பாஸ்கரன் கேட்டுள்ளார். அபோது பெண்கள் வருவதற்கு தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அப்போது கணேசன் இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை மறைக்க திட்டமிட்ட கணேசனின் கை, கால்களை வாயால் கட்டியுள்ளார். பின்னர் பாஸ்கரன் உடலை சாலையோரம் வீசி சென்றதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top