சில தினங்களாக என் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதோடு மட்டுமில்லாமல் ஆபாசமான வார்த்தைகளிலும் அவர்களை திட்டுகின்றனர்.
அதனையும் தாண்டி பள்ளி கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யுமாறு அவர்களை துன்ப படுத்துவதாக மாணவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்த அநீதிகளுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளி வகுப்பறைகள், கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த படவில்லை என்பதை உறுதி செய்க என்று ஆணையம் கூறியுள்ளது. பள்ளிகளை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
போதுமான ஊழியர்களை நியமிக்காததற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரை குறை கூற முடியாது என்றும் அதற்கு முழுவதும் பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் மாநில மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு ஆக நான்கு வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை 2015இல் கீழ உரப்பனுர் மாணவன் பள்ளி வகுப்பறையில் சுத்தம் செய்த போது மேசை மேலே விழுந்து காயம் என அவரது தந்தை புகார் அளித்தார்.