இன்னிக்கு என் மனைவி உயிரோட இருகாங்க அப்படினா இவர்தான் காரணம்… லிவிங்ஸ்டன் உருக்கம்…

பிலிப் லிவிங்ஸ்டன் ஜோன்ஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட லிவிங்ஸ்டன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். தமிழில் 180 படங்களுக்கு மேல் நடித்தவர்.

இயக்குனர் ஜி. எம். குமாருடன் இணைந்து கன்னி ராசி (1985), காக்கி சட்டை (1985) ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி திரையுலகில் அறிமுகமானார். 1988 ஆம் ஆண்டு ‘பூந்தோட்ட காவல்காரன்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லிவிங்ஸ்டன்.

அடுத்ததாக நாயகனாக நடிக்க வாய்ப்பு வரவே, ‘சுந்தர புருஷன்’, ‘சொல்லாமலே’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘சுயம்வரம்’, ‘வானத்தைப்போல’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் லிவிங்ஸ்டன்.

90 களின் பிற்பகுதியிலும், 2000 களின் முற்பகுதியிலும் நடிகர்கள் கார்த்திக், பிரபுவை போலவே புகழின் உச்சத்தில் இருந்தவர் லிவிங்ஸ்டன். அதற்கு பிறகிலிருந்து தற்போது வரை சிறப்பு மற்றும் கேமியோ தோற்றத்தில் நடித்து வருகிறார் லிவிங்ஸ்டன்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என் மனைவிக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. அவருக்கு ஆபரேஷன் செய்யவில்லை என்றால் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறினார்கள். அப்போது தெய்வம் போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வந்து என் மனைவி ஆபரேஷன்க்கு ரூ. 15 லட்சம் ஹாஸ்பிடலில் கட்டி என் மனைவியின் உயிரை காப்பாற்றினார் என்று உருக்கமாக பேசியுள்ளார் லிவிங்ஸ்டன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews