Entertainment
எதிர்பார்த்தபடி வெளியேறியது இவர்தான்.!
பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி நடைபெற்ற முதல் எலிமினேஷன் கடந்த 7ம் தேதி நடைபெற்றது. அப்போது ஃபாத்திமா பாபு முதல் போட்டியாளராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அதை தொடர்ந்து 2வது எலிமினேஷன் நடைமுறை கடந்த 14ம் தேதி நடந்தது. அதில், வனிதா விஜயகுமார் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதுவரை வனிதாவை கரைத்து திட்டி வந்த பார்வையாளர்கள், அவருடைய வெளியேற்றத்தை தொடர்ந்து நிகழ்ச்சி மிகவும் சலிப்பு ஏற்படுவதாக சமூகவலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த வாரத்திற்கான எலிமினேஷன் பரிந்துரையும் நடந்து முடிந்தது. அதில், அபிராமி வெங்கடேசன், மோகன் வைத்தியா, சரவணன், சேரன், மீரா மிதூன் ஆகியோ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் மோகன் வைத்யா அல்லது சரவணன் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்ற விதத்தில் மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனால் மக்களின் கணிப்பினை இம்முறை உண்மையாக்கியுள்ளார் மோகன் வைத்யா. இறுதியில் கண் கலங்கி பிரியாவிடை பெற்று சென்றார்.
