Connect with us

இவர் காவிரி ஆணைய தலைவரா? கர்நாடக பிரதிநிதியா?-வைகோ;

வைகோ

தமிழகம்

இவர் காவிரி ஆணைய தலைவரா? கர்நாடக பிரதிநிதியா?-வைகோ;

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது மேகதாது அணை விவகாரம். இதுதொடர்பாக காவிரி ஆணைய தலைவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் கருத்துக்கும் தமிழகத்தில் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவிரி ஆணையத்தின் தலைவரா? அல்லது கர்நாடக அரசின் பிரதிநிதி? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஜூலை 23 இல் நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கப்படும் என கூறியுள்ளார்.

பாஜக அரசின் அறிவுறுத்தலின் பேரில் நேரடியாகவே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக ஹல்தர் செயல்படுகிறார் என்று வைகோ கூறியுள்ளார். நடுவர் மன்றம், உச்சநீதி மன்ற இறுதித் தீர்ப்பில் காவிரி குறுக்கே அணை அமைக்க தமிழக இசைக் பெற வேண்டும் என கூறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பல்வேறு புதிய திட்டங்களுக்கு காவிரி நீரை கொண்டு போகிறது என்பதை மறுக்க முடியாது என்றும் கூறினார். மேகதாது பற்றி விவாதிப்போம் என்று காவிரி படுகை கூறியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top