இவர் தான் ஒரிஜினல் உலகம் சுற்றும் வாலிபர்!! 22 ஆண்டுகளாக உலகம் சுற்றி சாதனை;
பொதுவாக அனைவருக்கும் உலகம் சுற்றி பார்க்க வேண்டும் ஆசை இருக்கும். ஆனால் தற்போது உலகம் சுற்றுகளில் ஒருவர் சாதனை புரிந்துள்ளார் தகவல் கிடைத்துள்ளது. அவர் குடும்பமாக கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் உலகை சுற்றி சாதனை புரிந்துள்ளார்.
அதன்படி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம் சுமார் 22 ஆண்டுகளாக பழைய கார் ஒன்றில் உலகை சுற்றிவந்து சாதனை புரிந்துள்ளது. 1908ஆம் ஆண்டு கிரகாம்பெல் காரில் அர்ஜென்டினாவில் இருந்து 2000 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி புறப்பட்டனர் ஹெர்மன் கண்டலேரியா தம்பதி.
அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களை சேர்ந்த 102 நாடுகளுக்கு சென்றுள்ளது ஹெர்மன்-கண்டலேரியா குடும்பம்.
ஹெர்மன் முப்பத்தி ஒரு வயது, மனைவி ஹெர்மன் கண்டலேரியாவுக்கு 29 வயது ஆன போது உலகப் பயணத்தை அவர்கள் தொடங்கினர். தங்களது 3 லட்சத்து 62 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தின் போது நான்கு குழந்தைகளையும் பெற்று வளர்த்தனர் ஹெர்மன்-கண்டலேரியா தம்பதி.
அமெரிக்க பயணத்தின் போது முதல் குழந்தையையும் நடுவில் அர்ஜென்டினாவுக்கு வந்தபோது இரண்டாவது குழந்தையையும் பிறந்துள்ளது. கனடாவில் மூன்றாவது குழந்தையையும் ஆஸ்திரேலியாவில் நாளாவது குழந்தையையும் பெற்றுள்ளனர்.
பயணத்தின் போதே தன் குழந்தைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுத்துள்ளார் தாய் கண்டலேரியா. தங்களது உலக சுற்றுப் பயணம் பற்றி வழியிலேயே புத்தகம் எழுதிய ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளார் ஹெர்மன். பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000 குடும்பங்களில் விருந்தினர்களாக ஹெர்மன் குடும்பத்தினர் தங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
