அந்த படத்தில் இவரும் உள்ளார்… பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழுவினர்…!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர விஷால் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் மார்க் ஆண்டனி படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியானது.

mark antonyy

 

ஆனால் அந்த போஸ்டரை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். காரணம் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி என குறிப்பிட்டு போஸ்டரில் ஜீ.வி.பிரகாஷ் படம் இடம்பெற்றிருந்தது. மேலும் முன்னதாக இந்த கதையை ஆதிக் ரவிச்சந்திரன் ஜிவியிடம் தான் கூறி இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

அதனை தொடர்ந்து தான் விஷாலிடம் பேசி சம்மதம் வாங்கிய ஆதிக் ஜி.வி.பிரகாஷ் படத்துக்காக தயார் செய்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பெயரை மட்டும் மாற்றி அப்படியே விஷால் படத்திற்கு வெளியிட்டதாக கூறி நெட்டிசன்கள் மீம்கள் போட்டு படக்குழுவினரை கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கேலி மற்றும் கிண்டல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக படக்குழுவினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி தற்போது ஜீவி பிரகாஷும் இந்த படத்தில் இணைந்துள்ளாராம். மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இருந்தாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷாலுக்கு பதில் ஜிவி படம் இருந்தது மிகப்பெரிய மிஷ்டேக். அந்த அளவிற்கு கவனக்குறைவாகவா படக்குழுவினர் இருப்பார்கள் என தற்போதும் பலர் அவர்களை விமர்சனம் செய்து தான் வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment