#breaking….. இரண்டாவது முறையாக இவரே முதல்வர்!! பாஜக அதிரடி அறிவிப்பு;
சில தினங்களுக்கு முன்பு நம் இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நான்கு மாநிலங்களில் பெரும்பான்மை நிரூபித்து பாஜக வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை நிரூபித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோவாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள பாஜக முதலமைச்சராக பிரமோத் சாவந்த்தை தேர்வு செய்துள்ளது. அதன்படி கோவா மாநில முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் 40 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக தேர்வாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
