கேரளாவை கேட்கத் துணிவில்லை; காமெடி செய்கிறார் துரைமுருகன்!- செல்லூர் ராஜு விமர்சனம்;

நேற்றைய தினம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் இதர அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

துரைமுருகன்

அந்த பேட்டியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை  வன்மையாக விமர்சித்திருந்தார் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

இந்த நிலையில் தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீர்வளத்துறை அமைச்சர் பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதன்படி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்கிறார் என்றும் அவர் தன் நிலையை மறந்து காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் மீது விமர்சித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை

அதோடு மட்டுமில்லாமல் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசை கேள்வி கேட்க நீர்வளத்துறை அமைச்சர் துணியவில்லை என்றும் கூறினார். தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் இவை முல்லைப் பெரியாறு அணையோடு நிற்காது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

இவை காவேரி நீர் விவகாரத்திலும், கபினி அணை விவகாரத்திலும் தொடரும் என்றும், இதனால் தமிழகத்தின் மொத்த நீர் ஆதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் கூறினார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment