விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்… பொதுக்கழிப்பிடத்திற்கு அழைத்த சிறுவர்கள்… அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்த நபர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோகித். 14 வயது சிறுவனான ரோகித் பள்ளி படிப்பை பாதியில் நிறத்திவிட்டு தினக்கூலி வேலைக்கு சென்று வருவதாக தெரிகிறது. இதனால் மது மற்றும் கஞ்ச பழக்கத்திற்கு அடிமையான ரோகித் அடிக்கடி நண்பர்களுடன் சேர்துமது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு இந்திராநகர் பகுதியில் ரோகித் தனதுநண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது நண்பர்களுக்குள் மோதல்ஏற்பட்டுள்ளது. அந்த மோதலின்போது மதுபாட்டிலை உடைத்து ரோகித்தின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்தியரோகித்தின் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதனால் கீழேசரிந்து விழுந்த ரோகித் சம்பவஇடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்துள்ளார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீஸார் இறந்த ரோகித்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னிடம் கஞ்சா விற்பனை செய்த நபருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இந்த கொலை நடந்துள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில்தெரியவந் துள்ளது. 14 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளசம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் இரண்டு நபர்களை பிடித்த பெரம்பலூர் போலீஸார் அவர்களிடம் தீவிர. விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.