
தமிழகம்
இலங்கை மக்களுக்கு உதவ, தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்த எம்எல்ஏ…!!!
தற்போது உலக அளவில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கிகொண்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசாங்கம் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது.
தினம்தோறும் இலங்கைக்கு கப்பல் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை வழங்கிக் கொண்டும் வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் சட்டப்பேரவையில் இது பற்றி பேசப்பட்டது.
அப்போது முதலமைச்சர் இலங்கை அரசுக்கு உதவுவது பற்றி மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழகம் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணி எம்எல்ஏ ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு வழங்கி உதவுவதாக கூறியுள்ளார். அதன்படி திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
வாய்ப்பு கிடைத்தபோது எழுந்துநின்று பேசிய எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதால் அங்கு தவிக்கும் மக்களுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்தார். இதற்காக இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
