நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் என்பதும் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் இந்த குழந்தை குறித்து பல்வேறு வதந்திகள் யூடியூப் சேனல்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஆராத்யாவுக்கு அரியவகை நோய் இருப்பதாகவும் அவர் அதிலிருந்து மீளவே முடியாது என்றும் மேலும் அவர் கூடிய சீக்கிரம் இறந்து விடுவார் என்றும் வதந்திகளை சில யூடியூப் சேனல்கள் பரப்பி வருகின்றன.

பார்வையாளர்கள் அதிகம் பெற வேண்டும் என்பதற்காக பல யூடியூப் சேனல்கள் பிரபலங்கள் குறித்து தவறாக பதிவு செய்து வருவது தொடர் கதை ஆகி வரும் நிலையில் கடைசியில் ஐஸ்வர்யாராய் மகள் மீது வதந்திகள் பரப்பி வருகின்றனர் என்பதும் இந்த வதந்தியால் ஆராத்யா மற்றும் அவரது பெற்றோர்கள் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது உடல்நிலை குறித்து பொய்யான தகவல்களை சிலை யூடியூப் சேனல்கள் பரப்பி வருகின்றனர் என்றும் அந்த யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் தன்னை பற்றிய வதந்தி பரப்பிய வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்
இந்த நிலையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், உடனடியாக ஆராத்யா குறித்த யூடியூப் வீடியோக்களுக்கு தடை விதித்துள்ளது. ஆராத்யா கடுமையாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்புவது கடுமையான குற்றம் என்று உடனடியாக அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.