Connect with us

HBD ரேவதி: பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த ரேவதிக்கு குவியும் பாராட்டு!

Entertainment

HBD ரேவதி: பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த ரேவதிக்கு குவியும் பாராட்டு!

b78480100b688051709547e4146e8fac-2

பிரபல நடிகை ரேவதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பிறந்தநாளின் போது அவர் தனது டுவிட்டர் சமூக தளத்தில் இணைந்து உள்ளார் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

பாரதிராஜா இயக்கிய மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நடிகை ரேவதி. கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக அவர் தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் அவரது நடிப்பிற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது தற்போதும் கூட அவர் தனது வயதுக்கு ஏற்றவாறு கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறார் என்பதும் தற்போது உருவாகிவரும் நவரசா என்ற வெப்தொடரில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ரேவதி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று முதல் தான் ட்விட்டரில் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளார். பிறந்தநாளில் டுவிட்டரில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தனது முதல் டுவிட்டாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேவதியின் புதிய டுவிட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top