தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜீவி பிரகாஷ் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் அதன்பின்னர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வரும் ஜிவி பிரகாஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை திரையுலக பிரபலங்கள் குவித்து வருகின்றனர். குறிப்பாக தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, தாணு உள்பட பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஜிவி பிரகாஷ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது