நக்கல் மன்னன் கவுண்டமணி பிறந்தநாள் இன்று…

தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடம் பதித்த நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி அவர்களுக்கு 84 ஆவது பிறந்த தினம் இன்று.

1960களில் தொடங்கியது இவரது திரையுலக பயணம். நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என்று பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்து கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

GAUNDAMANI

நகைச்சுவையில் சிரிப்போடு சிந்திக்கவும் வைத்து தனது அரசியல் நக்கல் நையாண்டிகளையும் கலந்து தருவதில் இவருக்கு நிகர் இவரே.

தொலைக்காட்சிகளில் இன்றும் வாழைப்பழ காமெடி வந்தால் ரசிக்காதவர் எவரும்  இருக்க மாட்டார்.

காந்த கண்ணழகி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, இது உலக மகா நடிப்புடா சாமி இப்படி இவரது வசனங்கள் இன்று 2k கிட்ஸ் வரை தொடர்ந்து வருகிறது. இன்று மீம்களில் இவரது முக பாவனைகளும் வசனங்களும் அதிக அளவு பங்கு வகிக்கிறது..
இன்று இவருக்கு 84வது பிறந்த நாள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காமெடி மன்னரே!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews