கட்டுக் கட்டாக சிக்கிய ஹவாலா பணம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!!

சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வந்த 40 லட்சம் ஹவாலா பணம் மற்றும் வைர நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் தங்க கடத்தல் மற்றும் ஹவாலா பணம் கடத்துதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மிரட்டும் மாண்டஸ் புயல்! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்?

அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் கோபால் என்ற பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அவரது உடைமைகளை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

இதில் சுமார் 40 லட்சம் ஹவாலா பணம் மற்றும் பல கோடி மதிப்புள்ள வைர நகைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவற்றிற்கான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.

கடல் சீற்றம்! 3 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்..!!

இதன் காரணமாக இரயில்வே போலீசார் கோபாலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.