இந்த உலகத்துல மொத்தம் ரெண்டு வகையான மக்கள் இருக்காங்க. ஒன்னு வாழ்றதுக்காக சாப்பிடறவங்க. இன்னொன்னு சாப்பிடறதுக்காக வாழ்றவங்க. அதாங்க உணவு பிரியர்கள் இவங்கள ஆங்கிலத்தில் FOODIE அப்படினும் சொல்லுவாங்க. இவங்களுக்கு சாப்பாடு இருந்தா போதுங்க வேற எதுவுமே தேவையில்லை.
எப்பவுமே என்ன சாப்பிடலாம் புதுசா என்ன டிஷ் டிரை பண்ணலானு தாங்க யோசிச்சிட்டு இருப்பாங்க. அப்படி இவங்க யோசிச்சு யேசிச்சு தான் புதுசா புதுசா நிறைய டிஷ் உருவாகுதோ என்னமோ. அந்த வகையில இப்போ புதுசா ஒரு டிஷ் டிரண்டாகிட்டு இருக்கு. அதுதாங்க ஃபயர் பானி பூரி. கேட்கவே டெரரா இருக்குல.
அதாவது நெருப்போட சேர்த்து பானி பூரியை சாப்பிடறத தான் ஃபயர் பானி பூரினு சொல்றாங்க. இப்போ இதுதாங்க குஜராத்ல பயங்கர டிரண்டிங்கல இருக்கு. பொதுவா வட இந்தியால பானி பூரி ஒரு பேமஸான உணவு. இந்த உணவுக்கு பல பேர் அடிமையா இருக்காங்கனா பார்த்துக்கோங்க.
ஏற்கனவே இந்த உணவுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கறதால இதை இன்னும் பேமஸ் ஆக்கறதுக்காக தான் இப்போ இதுல ஃபயர் சேர்த்திருக்காங்க. குஜராத்ல இருக்குற அகமதாபாத்ல தாங்க பானிபூரிய
நெருப்புடன் சேர்த்து அப்படியே சாப்பிடறத அறிமுகப்படுத்திருக்காங்க.
இந்த நெருப்பு பானிபூரி தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமா இருக்குதாம். ஃபயர் பானிபூரி என்று சொல்லப்படும் இதை உண்பது போன்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. என்னங்க நீங்களும் பானிபூரி லவ்வரா அப்போ உடனே கிளம்புங்க.