பிளாக் இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? நாக்பூரில் பிரபலமாகும் பிளாக் இட்லி……!

சாப்பாடு என்றால் யாருக்க தான் பிடிக்காது. அதிலும் முன்பு மாதிரி தற்போது கிடையாது. வாயில் நுழையாத புது புது உணவு வகைகளை உருவாக்கி உண்டு வருகிறார்கள். அந்த வகையில் டல்கோனா காஃபி முதல் பயர் பானி பூரி வரை பல உணவுகள் சமீபத்தில் இணையத்தில் டிரண்டானது.

இப்போது அந்த வரிசையில் புதிதாக பிளாக் இட்லி இணைந்துள்ளது. அது என்னங்க பிளாக் இட்லி? இட்லினாலே வெள்ளையா மல்லிகைப்பூ மாதிரி தான் இருக்கும். கருப்பா ஒரு இட்லியானு தான கேட்கறீங்க? ஆமாங்க நாக்பூர்ல தான் இந்த கருப்பு இட்லி மிகவும் பிரபலமாக உள்ளது.

கருப்பு கலர்ல இட்லியா என்ற அதே ஆச்சரியம் தான் எங்களுக்கும். நாக்பூரைச் சேர்ந்த விவேக் மற்றும் ஆயிஷா என்ற உணவு பிரியர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளனர். அதில் உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டர் சாம்பல்-கருப்பு நிற இட்லி மாவை ஒரு ஸ்டீமர் தட்டில் ஊற்றுகிறார்.

பின்னர் இட்லிகளை சமைத்து விட்டு பின்னர் ஒரு தட்டில் பரிமாறி அந்த இட்லியின் மீது சிறிது நெய் ஊற்றி அதன் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவி தேங்காய் சட்னியுடன் சுடச்சுட பரிமாறுகிறார். இந்த வீடியோவை பார்த்தாலே நமக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உண்டாகும்.

ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இட்லி அனைவரும் உண்பதற்கு ஏற்றதல்ல. ஆம் வீடியோவின் கேப்சனில், “இது ஒரு டிடாக்ஸ் இட்லி. கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்ல” என முக்கிய குறிப்பு ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்கள். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment