வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் சோதனை தேவையில்லை!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கி உள்ளது. அதே சமயம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி சேர்த்துக்கொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.இந்திய அரசு

இந்த நிலையில் தற்போது இந்திய அரசானது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இன்று முதல் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி உலக நலவாழ்வு அமைப்பால் எடுக்கப்பட்ட தடுப்பூசி போட்டு இருப்போருக்கு வீட்டு தனிமையும் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.அவர்களுக்கு கொரோனா  சோதனையும் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

தடுப்பூசி போடவிட்டாலோ அல்லது ஒரு தவணை மட்டும் தடுப்பூசி போட்டிருந்தால் கண்டிப்பாக இந்தியாவுக்கு வந்ததும் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசி போடாதவர்கள் ஏழுநாள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கூறியது. எட்டாவது நாள் மீண்டும் ஒரு முறை சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.

சோதனை அறிக்கை குறித்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும். போலியானது என கண்டறியப்பட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment